சினிமா

ஜனவரியில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘டான்’

ஜனவரியில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘டான்’

sharpana

சிவகார்த்திகேயனின் ‘டான்’ வரும் ஜனவரியில் வெளியாகவிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ’டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார்.‘டாக்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன் மீண்டும் இப்படத்தில் ஹீரோயினாக இணைந்திருக்கிறார். இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ளன. தற்போது வெளியீட்டுப் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. டிசம்பரில் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, ஜனவரி 7 ஆம் தேதி ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’, பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாகவிருப்பதால் ‘டான்’ படக்குழு ஜனவரி இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.