சிவகார்த்திகேயனின்‘டான்’ டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியது.
அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பதோடு லைகா நிறுவனத்துடன் இணைந்து ‘டான்’படத்தை தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்க, பிரியங்கா அருள்மோகன் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே சூர்யா, சிவாங்கி உள்ளிட்டப் பலர் நடிக்கிறார்கள்.
கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இன்று பூஜையுடன் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் சிபி சக்ரவர்த்தி உள்ளிட்டோர் பூஜையில் கலந்துகொண்டனர். சிவகார்த்திகேயன் டப்பிங் பேசும் புகைப்படங்களும் பூஜை புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறது படக்குழு.
சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் ‘டாக்டர்’, ‘அயலான்’ உள்ளிட்டப் படங்கள் வெளியாகவிருக்கின்றன.