சினிமா

தீபாவளிக்கு தனியார் தொலைக்காட்சியில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’

sharpana

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4 ஆம் தேதி தனியார் தொலைக்காட்சியில் வெளியாகிறது.

‘ஹீரோ’ படத்திற்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் அடித்து தற்போதுவரை ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிரியங்கா அருள்மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, தீபா, அர்ச்சனா உள்ளிட்டோர் நடிப்பில் கவனம் ஈர்த்தார்கள். இந்த நிலையில், தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ‘டாக்டர்’ படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு 6.30 மணிக்கு ‘டாக்டர்’ ஒளிபரப்பாகும் என்பதை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது, தனியார் தொலைக்காட்சி.