நடிகர் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்புத்தளப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
‘மாநாடு’ வெற்றிக்குப்பிறகு விரைவில் சிம்பு நடிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’ வெளியாகவிருக்கிறது. மூன்றாவது முறையாக கெளதம் மேனனுடன் இணைந்துள்ள சிம்பு வித்தியாசமான கதைக்களத்தில் கிராமத்து இளைஞராக முத்து என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்புவின் 47-வது படமான இப்படம் எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகி வருகிறது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே, இப்படத்தின் கிளிம்ப்ஸோடு ‘ஓ மறக்குமா நெஞ்சம்’ ரஹ்மானின் குரலுடன் ஒலித்த பாடலும் ரசிக்க வைத்தது.
தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், நேற்றிரவு நடிகை ராதிகா சரத்குமார், சிம்பு, கெளதம் மேனனுடன் இருக்கும் புகைப்படத்தினை உற்சாகமுடன் வெளியிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது, ’பிக்பாஸ்’ வருடணுடன் சிம்பு இருக்கும் படப்பிடிப்புத்தளப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.