சினிமா

“சண்டைக் காட்சிகள் சூப்பராக வந்துள்ளது” - வெளியானது ‘வெந்து தணிந்தது காடு’ புது அப்டேட்

“சண்டைக் காட்சிகள் சூப்பராக வந்துள்ளது” - வெளியானது ‘வெந்து தணிந்தது காடு’ புது அப்டேட்

sharpana

கெளதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

’விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படத்திற்குப் பிறகு சிம்பு கெளதம்மேனன் கூட்டணி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. சிம்புவின் 47-வது படமாக எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். முற்றிலும் கிராமத்து பின்னணியில் வித்தியாசமான ஆக்‌ஷன் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் திருச்செந்தூரில் தொடங்கியது.

இந்த நிலையில், ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை, படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அந்தத் ட்விட்டரில், கெளதம் மேனன் உள்ளிட்டப் படக்குழுவுடன் சிம்பு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ‘விரைவில் மும்பையில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. சண்டைக் காட்சிகள் சூப்பர் டூப்பராக வந்துள்ளது. கடுமையாக உழைத்துள்ளார் சிம்பு. இந்த சண்டைக் காட்சி ரசிகர்களுக்கு திரையில் விருந்தாக இருக்கும்” என்ற அப்டேட்டையும் கொடுத்துள்ளது.