சினிமா

ஓடிடியில் வெளியாகும் ’மாநாடு’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஓடிடியில் வெளியாகும் ’மாநாடு’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

sharpana

’மாநாடு’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியிருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் ’மாநாடு’ கடந்த நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ விடுமுறை நாட்களில் வெளியாகாமல் வேலை நாளில் வெளியாகியே கூட்டத்தை தியேட்டருக்கு வரவைத்தது. அதோடு, வெளியான ஒரே வாரத்தில் உலகளவில் ரூ.50 கோடி ரூபாய் வசூலும் செய்தது. வெற்றியின் உற்சாகத்தில் ‘மாநாடு 2’ எடுக்கப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளார் வெங்கட் பிரபு.

இந்த நிலையில், ‘மாநாடு’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் வெளியீட்டுத் தேதி தற்போது வெளியாகி இருக்கிறது. சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அதேநாளில், தியேட்டர்களில் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள ‘ராக்கி’, இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்துள்ள ‘ரைட்டர்’, அதர்வாவின் ‘குறுதி ஆட்டம்’, சத்யராஜின் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ உள்ளிட்டப் புதிய படங்கள் வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.