சினிமா

6 நாட்களில் ஒரு கோடி பார்வையாளர்கள்: சிலம்பரசனின் குக்கிங் வீடியோ புதிய சாதனை!

sharpana

க்ளீன் ஷேவ் லுக்கில் சமீபத்தில் நடிகர் சிலம்பரசன் வெளியிட்ட குக்கிங் செய்யும் வீடியோ ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

‘மாநாடு’ படத்தில் நடித்து முடித்துள்ள சிலம்பரசன், அடுத்ததாக ‘பத்து தல’ படத்தில் நடிக்கவிருக்கிறார். ‘ஈஸ்வரன்’ படத்தில் நீண்ட தாடியுடனும், ‘மாநாடு’ படத்தில் ட்ரிம் செய்யப்பட்ட தாடியுடனும் நடித்திருந்தார். தற்போது க்ளீன் ஷேவ் செய்துள்ளார். புதிய லுக்கில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டின் சமையல் அறையில் பனீர் மஷ்ரூம் செய்துகொண்டே பேசும் வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில், ”வெளியில் வாங்குவது சேஃப் இல்லை’. அதனால்தான், நானே செய்கிறேன்” என்று சிலம்பரசன் சொல்லிக்கொண்டே பனீர் மஷ்ரூமை செய்துகொண்டிருந்தார்.

’தாடி எல்லாம் எடுத்துவிட்டு செம்ம ஃப்ரஷா இருக்கீங்க. சூப்பரா இருக்கு’ என்று சிலம்பரசன் நண்பர் சொல்ல, “அப்டியா... அப்டியா... முகமே எனக்கு இப்போதான் தெரியுது. எவ்ளோ நாளா தாடியோடவே இருந்துட்டேன்” என்று ஒரு ஸ்டைலிஷ் லுக்கில் சொல்வது ரசிக்க வைக்கிறது. இந்த வீடியோ வெளியாகி ஆறே நாளில் இதுவரை 1 கோடி பேர் பார்த்துள்ளனர்.