சினிமா

நடிகர் ஜெய் பிறந்தநாள் கொண்டாட்டம்... சிலம்பரசன் நேரில் வாழ்த்து!

நடிகர் ஜெய் பிறந்தநாள் கொண்டாட்டம்... சிலம்பரசன் நேரில் வாழ்த்து!

sharpana

நடிகர் ஜெய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் சிலம்பரசன் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ஜெய் தனது 37 வது பிறந்தநாளைக் செவ்வாய்க்கிழமை கொண்டாடினார். இந்தக் கொண்டாட்டத்தில் இயக்குநர் சுசீந்திரன், நடிகர் சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துவிட்டு ஜெய்யின் பிறந்தநாள் நிகழ்வில் சிலம்பரசன் பங்கேற்றுள்ளார்.

வாக்களிக்க வந்த அதே உடையிலேயே சிலம்பரசன், ஜெய் பிறந்தநாளிலும் கலந்துகொண்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சிலம்பரசன் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன. அதேபோல, இயக்குநர் சுசீந்திரனும் ஜெய் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு ’தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ படத்திற்குப்பின் சில வருடங்கள் படங்கள் நடிக்காமல் இருந்த ஜெய் மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிப்பதோடு இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார். இது அவரது 30-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.