சினிமா

ஹெச்.ராஜாவை விமர்சித்த சித்தார்த்..!

ஹெச்.ராஜாவை விமர்சித்த சித்தார்த்..!

Rasus

ஹெச்.ராஜாவை விமர்சித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நேற்று நடைபெற்றது. பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் இந்த ஊர்வலம் சென்றது. அப்போது குறிப்பிட்ட வழியில் ஊர்வலம் செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த ஹெச்.ராஜா காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தடையையும் மீறி ஊர்வலம் சென்றது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இதனிடையே வீடியோவில் நீதிமன்றம் மற்றும் காவல்துறையினர் குறித்து மோசமான கருத்துக்களை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹெச்.ராஜா, தான் நீதிமன்றத்தை மதிப்பவன் என்றும், நீதிமன்றம் குறித்து தவறாக பேசியதாக பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும் விளக்கம் அளித்தார். வீடியோ எடிட் செய்யப்பட்டு பரப்பப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் ஹெச்.ராஜாவை கடுமையாக விமர்சித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவு உங்களுக்காக இதோ..