சினிமா

அரசியல் அறிவிப்பு: கமல்ஹாசனிடம் ஸ்ருதி கேட்ட அந்த கேள்வி!

webteam

அரசியல் அறிவிப்புக்குப் பிறகு ஏகப்பட்ட எதிர்வினைகள் வருகின்றன என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதுபற்றி வார இதழ் ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது:

’’அரசியல் அறிவிப்புக்குப் பிறகு என்னென்ன மாதிரியான எதிர்வினைகள் வருகின்றன’’ என்கிறார்கள். ஏகப்பட்ட எதிர்வினைகள். இவை, என் மகள் ஸ்ருதி கேட்டவை, ‘’அப்ப எங்க கமல்ஹாசன் என்ன ஆவார்? எனக்குத் தெரிஞ்ச என் அப்பா என்ன ஆவார்?’’ என்றார். ”அவர் அப்படியேதான் இருப்பார். கொஞ்சம் நரை கூடிட்டா அப்பா இல்லைன்னு சொல்லிடுவியா?’’ என்றேன். ‘’என்னை உனக்கு அப்பாவாக தெரியுமா. உலக நாயகனாகத் தெரியுமா? அதே அப்பாவாகத்தான் இருப்பேன்’’ என்றேன். 
‘நான் ஆரம்பிக்கும்போது உலக நாயகன் என்ன, உள்ளூர் நாயகன் கூட கிடையாது. ‘அந்தப் பையன் பேர் என்னப்பா’ என்றுதான் என்னைத் தேடினார்கள். பிறகு வளர வளர வேறு வேறு பட்டம் கொடுத்தார்கள். அவை பறந்து போராடித்துவிட்டது என்றதும், அந்தப் பட்டத்தை இறக்கிவிட்டு வேறுபட்டம் ஏற்றினார்கள். புதுக்காற்று அடிக்க அடிக்க புதுப்பட்டங்கள் வந்து சேர்ந்தன. அவ்வளவுதான். அதைப் போய் சீரியசாக எடுத்துக்காதம்மா’’ என்றேன். ’’நீங்கள் கலைஞன் என்பது முக்கியமில்லையா?’’ என்றார் ஸ்ருதி விடாமல். ‘’அது மாறவே மாறாது’ என்றேன்’’.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

’’கட்சித் தொடங்குவதை நான் தாமதப்படுத்துவது பயத்தினால் அல்ல, சிரத்தையினால்தான்’’ என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.