ஆர்யன் கான் சர்ச்சைக்குப்பிறகு வரும் டிசம்பரிலிருந்து நடிகர் ஷாருக்கான் படப்பிடிப்புகளில் பங்கேற்கவுள்ளார்.
கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டடு ஒரு மாதம் சிறையில் இருந்தார். அவருக்கு கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி ஜாமீன் கிடைத்தது. ஆர்யன் கான் கைது நடவடிக்கைக்குப்பிறகு வேதனைக்குள்ளான ஷாருக்கான் தான் நடித்துக்கொண்டிருந்த படங்கள், படப்பிடிப்பு சார்ந்த பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைத்துவிட்டு மகனின் ஜாமீனுக்காக சிறைக்கு அடிக்கடி சென்று சந்தித்து வந்தார். இதனால், அட்லீ படத்தின் படப்பிடிப்பும் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், இம்மாதம் முழுவதையும் வீட்டில் மகன் ஆர்யன் கானோடு இருந்துவிட்டு மீண்டும் வரும் டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார் ஷாருக்கான். குறிப்பாக, அட்லீ-ஷாருக்கான் நயன்தாரா இணையும் ’லயன்’ படப்பிடிப்பில் பங்கேற்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதோடு, ‘பதான்’ படத்திற்காக தீபிகா படுகோனேவுடன் நடிக்கவிருந்த ஸ்பெயின் நாட்டுக் பாடல் காட்சிகளுக்காகவும் ஸ்பெயின் செல்லவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆர்யன் கான் சர்ச்சையால் ‘லயன்’, ‘பதான்’ இரண்டு இந்த இரண்டு படத்தின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டு படத் தயாரிப்பாளர்களுக்கும் நஷ்டம் என்று கூறப்படுகிறது.