சினிமா

’எந்திரன்’ கெட்டப்பில் மிரட்டும் சரவணன் : ‘தி லெஜெண்ட்’ பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

sharpana

சரவணன் நடிக்கும் ‘தி லெஜெண்ட்’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

தனது கடை தொடர்பான விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்த சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன், தற்போது இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் ‘தி லெஜெண்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாவதோடு தயாரிப்பாளராகவும் களம் இறங்குகிறார் சரவணன். நாயகியாக பாலிவுட் மாடல் ரித்திகா திவாரி நடிக்கிறார். யோகி பாபு, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பட்டுக்கோட்டைப் பிரபாகர் திரைக்கதை அமைத்துள்ளார்.ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் உள்ளிட்டோர் நடனம் அமைக்க கனல் அரசு ஃபைட் மாஸ்டராகப் பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ’எந்திரன் 2.0’  ரஜியை நினைவூட்டும் ஃபேக்ரவுண்ட் ப்ளஸ் காஸ்டியூமில் கெத்தாக சரவணன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் 9 ஆம் தேதி வெளியாகிறது என்று அறிவித்துள்ளனர். இப்பாடலை, பா.விஜய் எழுதியுள்ளார்.