சினிமா

பாலிவுட் நடிகையுடன் ஜோடி போடும் சந்தானம்

பாலிவுட் நடிகையுடன் ஜோடி போடும் சந்தானம்

Rasus

அறிமுக இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக புதுப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

நாளைய இயக்குநர் சீஸன் 4-ல் வெற்றி பெற்றவர் ஜான்சன். இவர் வெள்ளித்திரையில் தற்போது இயக்குநராக அறிமுகமாக உள்ளார். காமெடியில் கலக்கி வந்த நடிகர் சந்தானத்தை வைத்து புதுப்படம் ஒன்றை ஜான்சன் இயக்க உள்ளார். இன்னும் பெயரிப்படாத இப்படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தாரா அலிசா பெர்ரி நடிக்கிறார். இவர் பாலிவுட்டில் மாஸ்ட்ரம், த பர்ஃபெக்ட் கேர்ள் , லவ் கேம்ஸ் என ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மொட்டை ராஜேந்திரனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்கிறார்.

தற்போது படத்திற்கான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படத்திற்கான தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்க்கிள்பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட்  நிறுவனம் சார்பில் எஸ்.ராஜ். நாராயணன் இப்படத்தை தயாரிக்கிறார்.

நடிகர் சந்தானம் நடிப்பில் ‘தில்லுக்கு துட்டு-2’ விரைவில் வெளிவர உள்ள நிலையில் புதிய படத்தை அவர் கையில் எடுத்துள்ளார்.