சினிமா

’அந்தகன்’ படக்குழுவினருடன் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய சமுத்திரகனி!

’அந்தகன்’ படக்குழுவினருடன் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய சமுத்திரகனி!

sharpana

நடிகர் சமுத்திரகனி இன்று தனது பிறந்தநாளை ‘அந்தகன்’ படக்குழுவுடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.

இயக்குநர், கதாநாயகன், நகைச்சுவை நடிகர், உறுதுணை கதாபாத்திரம், வில்லன் என பல முகங்களில் நடிப்பில் ஒரு சமுத்திரமாய் திகழும் நடிகர் சமுத்திரகனி இன்று தனது 48 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

தேசிய விருதுகளைக் குவித்த ‘அந்தாதூன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அந்தகன்’ படக்குழுவினருடன் பிறந்தநாளை கேட் வெட்டிக் கொண்டாடியுள்ளார் சமுத்திரகனி. சமுத்திரகனியுடன், அந்தகனில் நடிக்கும் பிரஷாந்த்,சிம்ரன், பிரியா ஆனந்த், தியாகராஜன் உள்ளிட்ட படக்குழுவினர் பிறந்தநாளை சிறப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.