சினிமா

நடிகர் சாமிக்கண்ணு மரணம்: நடிகர் சங்கம் இரங்கல்!

நடிகர் சாமிக்கண்ணு மரணம்: நடிகர் சங்கம் இரங்கல்!

Rasus

மூத்த தமிழ் நடிகர் சாமிக்கண்ணு உடல் நல குறைவால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 95. அவர் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

தனது எட்டு வயதிலிருந்து நாடக கம்பெனிகளில் பணியாற்றி 1954 ல் ’புதுயுகம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் சாமிகண்ணு. சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் உட்பட பல ஹீரோக்களுடன் நடித்துள்ளார். பட்டிக்காடா பட்டணமா, பாட்டும் பரதமும், நான், அன்னக்கிளி, உரிமைக்குரல், உதிரிப்பூக்கள், ரஜினிகாந்துடன் ஜானி, முள்ளும் மலரும், போக்கிரி ராஜா, கமலுடன், சகலகலா வல்லவன், என் ராசாவின் மனசிலே உட்பட சுமார் 400 படங்களில் நடித்துள்ளார். இவர், உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இறுதி சடங்கு இன்று மாலை நடக்கிறது. அவருக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

மறைந்த சாமிகண்ணுவுக்கு விசாலாட்சி என்ற மனைவி, அம்பிகா, ராஜேஸ்வரி என்ற மகள்கள், விவேகானந்தன், தயானந்தன் ஆகிய மகன்கள் உள்ளனர்.