நடிகர் ரவி மோகன் புதிய தலைமுறை
சினிமா

“தாய் தந்தை செய்த புண்ணியத்தால் இங்கு வந்திருக்கிறேன்” - திருவண்ணாமலையில் நடிகர் ரவி

அருணாச்சலேஸ்வரர் தரிசிக்க வேண்டும் என மனதிற்கு தோன்றினால் நேராக திருவண்ணாமலை வந்து விடுவேன் - நடிகர் ரவி மோகன்

PT WEB

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடிகர் ரவி சாமி தரிசனம் செய்துள்ளார்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நடிகர் ரவி மோகன்

அந்தவகையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு நடிகர் ரவி மோகன் இன்று காலை சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார். தை மாதம் பிறந்த நிலையில் அங்கு முதலில் சம்பந்த விநாயகர் மற்றும் சாமி அம்பாளை அவர் தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டது.

ரவியை பார்த்த பக்தர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரோடு நின்று செல்ஃபி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினர். அவரும், அனைவருடனும் செல்ஃபி புகைப்படத்திற்கு சிரித்தபடி நின்று போஸ் கொடுத்தார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், “காதலிக்க நேரமில்லை படம் வெளிவந்ததற்கும் நான் கோவிலுக்கு வந்ததற்கும் சம்பந்தமில்லை. தாய் தந்தையர் செய்த புண்ணியத்தாலும் மன நிம்மதிக்காகவும் கோவிலுக்கு வந்தேன்” என தெரிவித்தார்.

மேலும், “அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க வேண்டும் என மனதிற்கு தோன்றினால் திருவண்ணாமலைக்கு வந்து விடுவேன்” என தெரிவித்தவர் ஜினி படம் 95 சதவீதம் தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.