சினிமா

புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த நடிகர் ராம் சரண்

புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த நடிகர் ராம் சரண்

sharpana

நடிகர் ராம்சரண் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இயக்குநர் ஷங்கரின் ’ராம் சரண் 15’ முதற்கட்டப் படப்பிடிப்பை புனேவில் முடித்தவுடன் நடிகர் புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார் நடிகர் ராம் சரண். பெங்களூருவில் புனித் ராஜ்குமார் அண்ணன் சிவராஜ்குமாரை வீட்டில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சிரஞ்சீவி புனித் ராஜ்குமார் உடலுக்கு நேரடியாகவே அஞ்சலி செலுத்திய நிலையில் அவரது மகன் ராம்சரண் தற்போது புனித் ராஜ்குமார் குடும்பத்தை சந்தித்துள்ளார். 

இதற்கு முன்னதாக, 46 வயதான பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையொட்டி, அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறையினரும் காண்டிவரா மைதானத்தில் அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடலுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர், பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ராணா டகுபதி உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் பிரபுதேவா, அர்ஜுன் உள்ளிட்ட தமிழ் நடிகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.