ஏவிஎம் சரவணன் உடலுக்கு ரஜினி அஞ்சலி PT web
சினிமா

"சினிமாவை உயிருக்கு உயிராக நேசித்தவர்" - ஏவிஎம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் ரஜினி உருக்கம்!

முதுபெரும் தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன் (86) வயது மூப்பு காரணமாக இன்று காலமான நிலையில், நடிகர் ரஜினிகாந்த், அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Prakash J

முதுபெரும் தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன் (86) வயது மூப்பு காரணமாக இன்று காலமான நிலையில், நடிகர் ரஜினிகாந்த், அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

முதுபெரும் தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன் (86) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியாவில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய மறைவுக்குப் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மிகப்பெரிய மனிதர். ஜென்டில் மேன் என்பதற்கு எடுத்துக்காட்டு சரவணன் சார் அவர்கள்தான். வெள்ளை நிறத்தில்தான் அவர்கள் உடையணிவார்கள். அதுபோல் அவரது உள்ளமும் வெண்மையாகத்தான் இருக்கும். சினிமாவை உயிருக்கு உயிராக நேசித்தவர்.

ஏவிஎம் சரவணன் உடலுக்கு ரஜினி அஞ்சலி

10 நிமிடம் பேசினாலும், ’அப்பாச்சி.. அப்பாச்சி’ என அவரது அப்பாவை நினைவுப்படுத்திக் கொள்வார். என்மீது அதிகம் அன்பு கொண்டிருப்பார். என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்டகாலங்களில் எல்லாம் எனக்கு துணையாக இருந்தவர். ஏவிஎம் நிறுவனத்தில் நான் 9 படங்கள் பணிபுரிந்திருக்கிறேன். அந்த 9 படங்களும் மிகப்பெரிய ஹிட். அதற்கு முக்கியக் காரணம் சரவணன் சார் என்று சொன்னால் மிகையாகாது.

1980இல் மிகப்பெரிய செலவில் எடுக்கப்பட்ட படம் ‘முரட்டுக்காளை’. 2000இல் ’சிவாஜி’. அது, மிகப் பிரம்மாண்டமான படம். அதேபோல் 2026இல் இதைவிட மிகப் பிரம்மாண்டமான படம் எடுக்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருந்தார். அது, நடக்கவில்லை.

அவருடைய மறைவு என்னுடைய மனதை அதிகம் பாதிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்தார்.