சினிமா

வினோத் கண்ணா மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்

Rasus

பிரபல இந்தி நடிகரும் பா.ஜ.க எம்.பியுமான வினோத் கண்ணா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தி நடிகர் வினோத் கண்ணா உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 70. அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். டிவிட்டரில் அவர் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், தனது நண்பர் வினோத் கண்ணாவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.