மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்புகிறார்.
ரஜினிகாந்த் கடந்த 19-ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக சென்னையிலிருந்து அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு ரோசெஸ்டர் நகரிலுள்ள மயோ கிளினிக் மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை நடைபெற்றது. இதை முடித்துக் கொண்ட ரஜினிகாந்த் அமெரிக்காவில் 18 நாட்கள் ஓய்வெடுத்தார். அப்போது ரஜினிகாந்த் உடன் ரசிகக்ள் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிகமாக பரவி வருகின்றன. இந்த நிலையில் நாளை அதிகாலை ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்.