சினிமா

கெடா மீசை, வெள்ளை வேட்டியில் ரஜினி - கலக்கும் ‘பேட்ட’ நியு லுக்

கெடா மீசை, வெள்ளை வேட்டியில் ரஜினி - கலக்கும் ‘பேட்ட’ நியு லுக்

rajakannan

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ திரைப்படத்தின் இரண்டாவது லுக் வெளியாகியுள்ளது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ‘பேட்ட’.  இப்படத்தின் படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினியுடன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, மேகா ஆகாஷ் எனப் பலர் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் மோஷன் பிக்சர் மற்றும் முதல் லுக் சமீபத்தில் வெளியானது. ஆனால், அதற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ரஜினியின் ஸ்டைலும், மோஷன் பிக்சரின் பின்னணி இசையும் விமர்சனத்திற்குள்ளானது. 

இந்நிலையில்,‘பேட்ட’ படத்தின் இரண்டாவது லுக் இன்று வெளியாகியுள்ளது. ரஜினி கெடா மீசை, வெள்ளை சட்டை, வேட்டியுடன் இருப்பது போல் போஸ்டர் உள்ளது. ரஜினியின் இந்தப் புதுத் தோற்றம் சற்றே வித்தியாசமாக உள்ளது.

ரஜினிகாந்த் ரசிகர்கள் இந்த போஸ்டரை வெகுவாக புகழ்ந்து வரும் வேளையில், அஜித் ரசிகர்கள் தங்களது தல கெட்டப்பை போல் இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் இருவரது படங்களையும் பதிவிட்டு பேசி வருகிறார்கள்.