கோலிவுட் சினிமாவிற்கு புது நாயகி ஒருவர் கிடைத்துள்ளார். இதுதாண்டா போலீஸ்.... என்று ஒரு காலத்தில் சக்கை போடு போட்ட நடிகர் ராஜசேகரை நினைவிருக்கிறதா... அவரின் மகள் ஷிவானிதான் அந்தப் புதுமுகம். இவரது அம்மாவும் நடிகைதான். ஜீவிதா. கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர்.
இதுகுறித்து ஷிவானி கூறும்போது, "அப்பாவும் , அம்மாவும் நடிகர்கள் என்பதால் சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் சின்ன வயதில் இருந்தே தெரியும். பரதநாட்டியம், குச்சிபிடி போன்ற நடன வகுப்புகளுக்கு சென்று வருகிறேன். இசையிலும் எனக்கு ஆர்வம் உண்டு. கீ போர்ட், கிடார் வீணை ஆகியவற்றை நன்றாக வாசிப்பேன். நிறைய தமிழ் படங்கள் பார்ப்பேன். தனுஷை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் நடித்த 3 படத்தை பார்த்து எமோஷனல் ஆகி அழுது இருக்கிறேன். விஷாலையும் எனக்கும் மிகவும் பிடிக்கும் அவர் மேன்லியாக இருப்பார். அவர் எங்கள் குடும்ப நண்பரும் கூட. நடிகர் விஜய் சேதுபதி செம ஆக்டர். அவர் நடிக்கும் படம் சென்சிபிலாக இருக்கும். அப்பா தான் என்னுடைய ஆள் டைம் ஹீரோ. அப்பா அம்மா சேர்ந்து நடித்த படங்களை ஒண்ணு விடாமல் பார்த்திருக்கிறேன். தற்போது 3-வது வருடம் மருத்துவம் படித்து வருகிறேன். முதலில் டாக்டர் ஆகிவிட்டு அப்புறம் ஆக்டர் ஆகிவிடுவோம்" என்கிறார் ஷிவானி.