குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட நடிகர் ராஜா சவுத்ரி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்வர் இந்தி நடிகர் ராஜா சவுத்ரி. டிவி சீரியல்களிலும் நடித்துள்ள இவர், பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று பிரபலமானவர். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூருக்குச் சென்றிருந்த இவர், குடிபோதையில் பொதுமக்களிடம் நேற்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தனர்.
உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் அவரை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என்று தெரிவித்தனர்.