சினிமா

”நடிகர் புனித் ராஜ்குமார் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது”: மருத்துவர் தகவல்

sharpana

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து, பெங்களூர் விக்ரம் மருத்துவமனையில் டாக்டர் ரங்கநாத் நாயக் பேசும்போது, “நடிகர் புனித் ராஜ்குமார் காலை 11.30 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டுவரும்போதே அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. அவருக்கு சிகிச்சை அளிக்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது” என்று கூறியிருக்கிறார்.