சினிமா

பிரித்விராஜின் ’கோல்ட் கேஸ்’ ஓடிடி வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

sharpana

நடிகர் பிரித்விராஜின் ‘கோல்ட் கேஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.

கேரளாவில் தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால், ஓட்டி தளங்களில் தொடர்ச்சியாக மலையாள படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த வருடத்தில் ‘த்ரிஷ்யம் 2’, ‘நிழல்’, ’இருள்’ ‘ஜோஜி’ ஆகிய படங்கள் வெளியான நிலையில், ஃபகத் ஃபாசிலின் ‘மாலிக்’, பிரித்விராஜின் ‘கோல்ட் கேஸ்’ படங்களும் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது. இந்த இரண்டு படங்களுக்குமே தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப்தான்.

சமீபத்தில், இந்த இரு படங்களும் ஓடிடியில் வெளியாகும் என்று அவர் அறிவித்திருந்த நிலையில், இன்று அதிகாரபூர்வமாக ‘கோல்ட் கேஸ்’ வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறார் நடிகர் பிரித்விராஜ். வரும் ஜூன் 30 ஆம் தேதி படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இப்படத்தில், பிரித்விராஜுக்கு ஜோடியாக ‘அருவி’ புகழ் நடிகை அதிதி பாலன் நடித்திருக்கிறார். தனு பாலக் இயக்கியிருக்கிறார். இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் நடிகர் பிரித்விராஜ் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.