சினிமா

’கர்ணன்’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை நேரில் பாராட்டிய நடிகர் பிரஷாந்த்!

’கர்ணன்’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை நேரில் பாராட்டிய நடிகர் பிரஷாந்த்!

sharpana

’கர்ணன்’ படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் பிரஷாந்த் இயக்குநர் மாரி செல்வராஜையும் தயாரிப்பாளர் தாணுவையும் பாராட்டியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கர்ணன்’ படம் வசூலில் சாதனைகளை நிகழ்த்தி வருவதோடு கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த விஜய் சேதுபதி ‘கர்ணன் அருமையான படம்’ என்று பாராட்டியிருந்தார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனுஷின் நடிப்பை பார்த்துவிட்டு ‘நடிப்பு கர்ணா’ என்று பாராட்டினார். நடிகர் விக்ரம் மாரி செல்வராஜ் வீட்டிற்கே சென்று ’கர்ணன்’ படத்தைப் பாராட்டினார்.

இந்நிலையில், தேசிய விருதுகளைக் குவித்த ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் ‘அந்தகன்’ படத்தில் நடித்துவரும் நடிகர் பிரஷாந்த் ’கர்ணன்’ படத்தைப் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் தாணுவையும் இயக்குநர் மாரி செல்வராஜையும் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். இதனால், படக்குழு மேலும் உற்சாகமடைந்துள்ளது.