சினிமா

வெளிநாட்டில் படிக்க மாணவிக்கு முழுக் கட்டணத்தையும் ஏற்ற பிரகாஷ் ராஜ்... குவியும் பாராட்டு

sharpana

சினிமாக்களில் பெரும்பாலும் வில்லன் நடிகராகவே அறியப்படும் பிரகாஷ் ராஜ் ஆந்திராவைச் சேர்ந்த பட்டியலினப் பெண்ணுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி பயில நிதியுதவி அளித்து நிஜத்தில் நான் ஹீரோதான் என்பதை நிரூபித்து பாராட்டுக்களைக் குவித்துள்ளார்.

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி சந்தனா கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பில் சிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். நல்ல தேர்ச்சி சதவிகிதத்தைப் பெற்றிருப்பதால், மேற்படிப்பு படிக்க இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி சால்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சந்தனாவின் அப்பா கடந்த 9 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இதனால், சந்தனாவின் பட்ட மேற்படிப்புக்கு குடும்ப வறுமை  தடையாக இருந்தது. இதனை கேள்விப்பட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் நன்கு படிக்கும் மாணவியின் கனவு நிறைவேறாமல் போய்விடக்கூடாது என்பதை உணர்ந்து சந்தனாவின் கல்விக்கட்டணம், தங்குமிடம் உட்பட அனைத்து கட்டணங்களையும் உடனடியாக செலுத்தியுள்ளார்.

இதனால், நெகிழ்ந்துபோன சந்தனா, தனது குடும்பத்தினருடன் பிரகாஷ் ராஜை சந்தித்து நன்றி தெரிவித்ததோடு ‘எனது தந்தையை உங்கள் உருவில் காண்கிறேன்’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.