சினிமா

'தாமிரபரணி' திரைப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் இணையும் விஷால், பிரபு

'தாமிரபரணி' திரைப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் இணையும் விஷால், பிரபு

JustinDurai
விஷால் நடிக்கும் 32-வது திரைப்படத்தில் நடிகர் பிரபு இணைந்துள்ளார்.
அறிமுக இயக்குனர் வினோத் என்பவர் இயக்கத்தில் விஷால் தற்போது நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில், நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே தாமிரபரணி திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதில் இடம்பெற்ற விஷால் - பிரபு சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் விஷால்-பிரபு இணைந்து நடிக்க உள்ளனர்.