பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதுமுள்ள சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பிரபாஸ்.
தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘ராதே ஷியாம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் வெளியாகியிருந்தது. ஐரோப்பிய நாடுகளில் ‘ராதே ஷியாம்’ படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் இந்தியா திரும்பினார். கொரோனா அச்சுறுத்தலினால் பொது வெளியிலிருந்து தன்னை தனிமைபடுத்திக் கொண்டார் அவர்.
இந்நிலையில் அவர் நேற்று தெலங்கானாவின் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவரை கண்டதும் ரசிகர்கள் ஆர்வமுடன் அவரோடு போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பியுள்ளனர்.
Photo courtesy: Prabhas fan page (twitter)
நடிகர் பிரபாஸும் அதற்கு சம்மதம் கொடுத்ததோடு ரசிகர்களோடு செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
தற்போது அந்த படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. ‘மாஸ்க் அணிந்துள்ள ரசிகர்களுடன் மட்டுமே செல்ஃபி’ என மாஸாக கட்டளையிட்டு ரசிகர்களோடு படங்களை எடுத்துக் கொண்டார் பிரபாஸ்.