சினிமா

’சாஹோ’வுக்காக உடலை குறைக்கிறார் பிரபாஸ்!

’சாஹோ’வுக்காக உடலை குறைக்கிறார் பிரபாஸ்!

webteam

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், ‘சாஹோ’. சுஜித் இயக்கும் இந்தப் படத்தில் அவர் ஜோடியாக நடிக்க, இந்தி நடிகைகளிடம் பேசி வந்தனர். இந்நிலையில் அனுஷ்காவே, பிரபாஸூடன் மீண்டும் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்துக்காக புதிய தோற்றத்துக்கு மாறியுள்ள பிரபாஸ், உடல் எடையை குறைக்க இருக்கிறார். இதற்காக அவர் பயிற்சி பெற்றுவருகிறார். 
படத்தின் வேலைகள் இப்போதே தொடங்கிவிட்டாலும் பிரபாஸ், அடுத்த மாதம்தான் கலந்து கொள்கிறார். ரூ.150 கோடியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகிறது. நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர் கென்னி பேட்ஸ், இந்தப் படத்துக்கு சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். படத்துக்காக துபாயில் பிரமாண்ட ஆக்‌ஷன் காட்சிகள் எடுக்கப்பட இருக்கின்றன. இந்த காட்சிகளை 40 நாட்கள் எடுக்க இருக்கின்றனர்.