தயாரிப்பாளர் சங்கத்தில் கூட்டுறவு அமைப்பை அமைத்து ஒருவரின் சிரமத்தை அறிந்து மற்றொருவர் உதவ முன்வர வேண்டும் என நடிகர் பார்த்திபன் தெரிவித்தார்.
தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சசிக்குமார் உறவினர் அசோக்குமார், சசிக்குமாரின் தயாரிப்பு நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராக பணிபுரிந்தவர். இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த கடிதத்தின் மூலம் அன்புச்செழியனிடம் கடன் பெற்றதும், அன்புச் செழியன் அவரை மிரட்டியதும் தெரியவந்தது. இந்த கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர், அன்புச்செழியன் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து பேட்டியளித்த பார்த்திபன், ஒப்பாரி வைக்கத்தான் கூடுகிறோமே தவிர, சினிமா சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சினிமாக்காரர்களே உதவ முன்வருவதில்லை என வருத்தம் தெரிவித்தார். அத்துடன் சங்கத்தில் கூட்டுறவு அமைப்பை அமைத்து ஒருவரின் சிரமத்தை அறிந்து மற்றொருவர் உதவ முன்வர வேண்டும் எனவும் கந்து வட்டி மரணங்கள் இனி நிகழாமல் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.