கடந்த 19 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் முத்துக்காளை மனைவி மாலதி, இன்று காலை 9 மணிக்கு காலமானார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றியவர் மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்தவர் முத்துக்காளை. இந்த நிலையில், முத்துக்காளையின் மனைவி மாலதிக்கு (வயது 47), திடீரென மூளையில் ரத்தகசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தலையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சைக்கு பின்னரும் உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்துவந்ததாகக் கூறப்பட்டது. கடந்த சில நாட்களாக நோய் கிருமித்தொற்றால் மூச்சுவிட சிரமப்பட்டு கொண்டிருந்த நிலையில், முதல்வர் விஜயிடம் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, அவருடைய உத்தரவின்பேரில், மாலதிக்கு மேல்சிகிச்சை உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், கடந்த 19 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாலதி, இன்று காலை 9 மணிக்கு காலமானார். அவரது உடல் இறுதிச்சடங்கிற்காக விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தாலுகா, சங்கம்பட்டி என்ற திருக்கோதையாபுரத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது.