சினிமா

பிரபல நகைச்சுவை, குணசித்திர நடிகர் மயில்சாமி காலமானார்

நிவேதா ஜெகராஜா

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 57.

இன்று அதிகாலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

1984-ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்துவந்த நடிகர் மயில்சாமி நகைச்சுவை நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெண்ணின் மனதை தொட்டு, தில், தூள், கில்லி, வீரம், குட்டி, உத்தமபுத்திரன், திருவிளையாடல் ஆரம்பம் போன்ற நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் மயில்சாமி.

தமிழ் திரையுலகில் முதன்முறையாக மிமிக்கிரி கேசட் வெளியிட்டவர் மயில்சாமிதான் என்றும் சொல்லப்படுகிறது. அவரது இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். சென்னையில் மழை, புயல் காலங்களில் அவர் மக்களுக்கு செய்த உதவிகளை செய்ததை குறிப்பிட்டு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.