மாரிமுத்துவின் மனைவி pt web
சினிமா

அவரே நேர்ல வந்த மாதிரி இருந்துச்சு.. உருக்கமாக பேசிய நடிகர் மாரிமுத்துவின் மனைவி

அவரது மறைவு ரசிகர்கள் பலரையும் வெகுவாக பாதித்துள்ளது. அவர் மேல் அன்பு வைத்த ரசிகர்களுக்கு நன்றி...

PT WEB

எதிர்நீச்சல் நெடுந்தொடர் மூலம் தனக்கென ரசிகர்களை உருவாக்கியவர் நடிகர் மாரிமுத்து. வெள்ளித்திரையில் நடிகராகவும், இயக்குநராகவும் அசத்தி வந்தாலும் 'இந்தாம்மா ஏய்...' என்ற ஒற்றை வசனத்தின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் மாரிமுத்து.

சமீபத்தில் மாரிமுத்து மாரடைப்பால் காலமானது அவரது குடும்பத்தினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது. இந்நிலையில் தனியார் நிறுவனம் நடத்திய நினைவேந்தல் கூட்டத்தில் கலந்துகொண்ட மாரிமுத்துவின் மனைவி தனது கணவரைப் பற்றி உருக்கமாக பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், “அவரது மறைவு ரசிகர்கள் பலரையும் வெகுவாக பாதித்துள்ளது. அவர்மேல் அன்பு வைத்த ரசிகர்களுக்கு நன்றி...” என்றார். அவர் பேசிய முழு காணொளி செய்தியில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ளது.