உடநலக்குறைவால் நடிகர் மன்சூர் அலிகான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர், அரசியல்வாதி என பன்முகத் திறமைகள் கொண்டவர் நடிகர் மன்சூர் அலிகான். திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மன்சூர் அலிகானை அவரது குடும்பத்தினர் அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் சிறுநீரக கல் அடைப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. கல் பெரியதாக இருப்பதால் அறுவை சிகிச்சை செய்யவுள்ளனர். அதே சமயம், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு நெகட்டிவ் என்று வந்துள்ளது.