சினிமா

தனது பிறந்தநாளில் நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த நடிகர் மகேஷ்பாபு- என்ன காரணம்?

தனது பிறந்தநாளில் நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த நடிகர் மகேஷ்பாபு- என்ன காரணம்?

Veeramani

தனது பிறந்தநாளில் மகேஷ்பாபு மரக்கன்றினை நட்டு, நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், விஜய், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரையும் மரக்கன்று நடும் சவாலுக்கு அழைத்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு “எனது பிறந்தநாளைக் கொண்டாட இதைவிடவும் ஒரு சிறந்த வழி இருக்க முடியாது. அனைவருக்கும் #GreenIndiaChallenge ஆக இதை நான் அனுப்புகிறேன். இந்த சவால் எல்லைகளை கடந்து தொடரட்டும். அதனால் இதனை ஆதரிக்க உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இது பசுமையான உலகத்தை நோக்கி ஒரு படி” என்று தெரிவித்துள்ளார்.