சினிமா

’கஞ்சா பூவு கண்ணால’- யுவன் இசையில்.. சித் குரலில் கவனம் ஈர்க்கும் ‘விருமன்’ பாடல்

’கஞ்சா பூவு கண்ணால’- யுவன் இசையில்.. சித் குரலில் கவனம் ஈர்க்கும் ‘விருமன்’ பாடல்

sharpana

நடிகர் கார்த்தியின் ’விருமன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட்டுள்ளது படக்குழு.

முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி ‘விருமன்’ படத்தில் நடித்துள்ளார். ’கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வெற்றியை தொர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. நாயகியாக இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார்.

இப்படத்தின், படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் கடந்த 60 நாட்கள் நடைபெற்று கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. படம் குறித்து நடிகர் கார்த்தி “ என்னுடன் ஜோடியாக நடித்த அதிதி ஷங்கருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. யதார்த்தமானவர். அவருடன் நடித்த நாள்கள் ஜாலியானவை. மீண்டும் ’விருமன்’ மூலம் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்ததில் சந்தோஷம். படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சூர்யா அவர்களுக்கும் நன்றி” என்று கூறியிருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘கஞ்சா பூ கண்ணால’ இன்று கார்த்தியின் பிறந்தநாளான இன்று வெளியாகியுள்ளது.

காதல் பாடலாக உருவாகியுள்ள இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். அவரது குரலுக்கு பீஸ்ட் மோடில் செம்ம ஃபாஸ்ட்டாக அதிதி ஷங்கர் நடனம் ஆடுவது கவனம் ஈர்த்துள்ளது. வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுக்கக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ‘விருமன்’ தியேட்டர்களில் வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.