சினிமா

“எனக்கு ஒப்பிடும் தவறான பழக்கம் இருந்தது”- மனம் திறந்த கார்த்தி..!

“எனக்கு ஒப்பிடும் தவறான பழக்கம் இருந்தது”- மனம் திறந்த கார்த்தி..!

Rasus

நாம் யாரை விடவும் உயர்ந்தவர்களோ தாழ்ந்தவர்களோ இல்லை. நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் என நடிகர் கார்த்தி தெரிவித்தார்.

‘அகரம் அறக்கட்டளை 10 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை’ என்ற தலைப்பில் சோழிங்கநல்லூர் தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அகரம் நிறுவனரும் நடிகருமான சூர்யா, மற்றும் கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் கார்த்தி பேசும்போது, “ தன் குடும்பம், வேலை என்று மட்டும் இல்லாமல் கிடைக்கும் நேரத்தில் தன்னார்வலர்களாக பணியாற்றி மற்றவர்களை உயர்த்த உழைக்கும் உங்களை நான் கடவுளாக பார்க்கிறேன்.

என்னிடம் இல்லாத சிந்தனை உங்களிடம் உள்ளது. அகரத்தை பொறுத்தவரை நான் விருந்தாளியாகவே இருக்கிறேன். என் பங்கு ஒன்றுமில்லை. என்னை யாருடனாவது ஒப்பிடும் தவறான பழக்கம் எனக்கு இருந்தது. அப்படி இருக்கக் கூடாது. நாம் யாரை விடவும் உயர்ந்தவர்களோ தாழ்ந்தவர்களோ இல்லை. நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். இதை உணர வேண்டும்.” எனத் தெரிவித்தார்.