நடிகர் கார்த்தி தனது மகனுக்கு ‘கந்தன்’ என்று பெயரிட்டுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் அறிவித்திருக்கிறார்.
நடிகர் கார்த்திக்கும் கோவையைச் சேர்ந்த ரஞ்சனிக்கும் கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிகளுக்கு ஏற்கனவே, ‘உமையாள்’ என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நடிகர் கார்த்தி ரஞ்சனி தம்பதிகளுக்கு, இரண்டாவதாக கடந்த அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், தனது மகனுக்கு ‘கந்தன்’ என்று பெயரிட்டுள்ளார் கார்த்தி. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில், ”கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக "கந்தன்" என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும். அன்புடன்... அப்பா” என்று நெகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறார். அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில், குழந்தையின் கைகள் முருகனின் வேலை நினைவுப்படுத்துகிறது.