சினிமா

‘காஷ்மோரா’வில் குதிரையேற்றம் கற்றுக்கொண்டேன்: ஆனால், பொன்னியின் செல்வனில்?: கார்த்தி

sharpana

‘பொன்னியின்’ செல்வன் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார் நடிகர் கார்த்தி.

நடிகர் கார்த்தி நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது. இதனைத்தொடர்ந்து, முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’, மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார்’ உள்ளிட்டப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில், ’பொன்னியின் செல்வன்’ படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தன. குறிப்பாக, த்ரிஷாவின் புகைப்படம் படத்தின் மீதான பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில், செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் குதிரையை வாஞ்சையுடன் தடவிக்கொண்டிருக்கும் அழகான புகைப்படத்தை வெளியிட்டு, “குதிரைகள் என்றாலே எனக்கு எப்போதும் ஈர்ப்புதான். ‘காஷ்மோரா’ படத்துக்காக குதிரையேற்றம் கற்றுக்கொண்டேன். ஆனால், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் படம் முழுக்க குதிரையின் மேல்தான் இருந்தேன். குதிரைகளுடன் இருக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று உற்சாகமுடன் தந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கார்த்தி.

கோகுல் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘காஷ்மோரா’ ’ரிப்பீட் மோர்’ என்று ரசிகர்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது. அந்தளவுக்கு காமெடி ப்ளஸ் காம வில்லன் நடிப்பில் இரட்டைக் கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தார் கார்த்தி. அதுவும், ’சிலை என்றாலும் பெண் சிலை ஆயிற்றே’ என்று குதிரையிலேயே கொடூர ராஜ்நாயக்காக வலம் வந்த கார்த்தியை ரசிகர்கள் மறக்கவே முடியாது. தற்போது, இரண்டாவது முறையாக ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக குதிரையிலேயே திரையில் தோன்றவிருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.