நடிகர் கார்த்திக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது!
இயக்குநர் அமீர் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ‘பருத்திவீரன்’ படத்தில் நடிகராக அறிமுகமாகி8 தமிழின் முன்னணி நடிகரானார் கார்த்தி. சிவக்குமாரின் வாரிசு என்ற அங்கீகாரத்துடன் நுழைந்தாலும் தனது நடிப்புத் திறமையால் தமிழக மக்கள் மனங்களில் ஆயிரத்தில் ஒருவனாய் திகழ்கிறார்.
இவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவருடன் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிகளுக்கு உமையாள் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நடிகர் கார்த்தி ரஞ்சனி தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியோடு அறிவித்திருக்கிறார். நடிகர் சூர்யாவும் மகிழ்ச்சியோடு ரீட்விட் செய்திருக்கிறார். அப்பாவாக இவர் நடித்த சிறுத்தை, கைதி படங்கள் வசூல் சாதனை படைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.