சினிமா

‘அடுத்த வருடம் நிச்சயம்’ கைதி2 படம் குறித்து நடிகர் கார்த்தி கொடுத்த மாஸ் அப்டேட்!

‘அடுத்த வருடம் நிச்சயம்’ கைதி2 படம் குறித்து நடிகர் கார்த்தி கொடுத்த மாஸ் அப்டேட்!

webteam

மாநகரம் படத்தை இயக்கிய போதே அறிமுக இயக்குநராக அசத்தியிருந்த லோகேஷ் கனகராஜ், தனது கைதி படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்ப வைத்தார். அதன் பிறகு லோகேஷ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் படம் வசூல் ரீதியில் ஹிட் அடித்திருந்தது. இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ், அவரை வைத்தே ‘விக்ரம்’ படத்தை கைதியின் சீக்வலாக இணைத்து இயக்கியிருந்தார். அதிலும் மாபெரும் வெற்றியை கண்டிருக்கிறார் அவர்.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் வெளியான விக்ரம் படத்திலேயே அதன் அடுத்த பாகத்துக்கான குறீயிடுகளை வைத்து எடுத்திருந்தது, அவரது ரசிகர்களின் ஆர்வத்தை பெரிதளவில் தூண்டியிருக்கிறது. ஏற்கெனவே கைதி 2 எடுக்கப்படும் என இயக்குநர் லோகேஷ், நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் என அனைத்து தரப்பிலும் கூறப்பட்டாலும் அது விக்ரம் ரிலீஸூக்கு பிறகு ஊர்ஜிதமாகியிருக்கிறது.

அண்மையில் லோகேஷ் அளித்த நேர்காணல் ஒன்றிலும் கைதி படத்தில் கார்த்தி ஜெயிலில் ஒரு கபடி ப்ளேயராக இருந்தார் எனக் கூறியிருந்தார். இந்த தகவல்தான் கைதி 2ல் கைதியின் ப்ரீக்வலாகவும், விக்ரமில் வந்த சூர்யாவின் ரோலக்ஸுக்கும், கைதி தில்லிக்கும் நேருக்கு நேர் களமாக இருக்கும் என கணிக்கப்பட்டு வருகிறது. மாஸ்டரை தொடர்ந்து விஜய் உடனான தளபதி67 படத்திற்கான எழுத்துப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதுகுறித்து சமீபத்தில் பேட்டில் ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், விருமன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் கார்த்தி, கைதி-2 படம் சூட்டிங் எப்போது துவங்கும் என்பது குறித்த தகவல் ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதாவது, தளபதி67 படத்தின் சூட்டிங்கை முடித்த பிறகு அடுத்த ஆண்டு கைதி இரண்டாம் பாகம் தொடங்கும் என கார்த்தி தெரிவித்தார்.