அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் பேச வைக்கிறார்கள் என நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டம், அரசியல் சூழல் உள்பட தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது கருத்து பதிவிட்டு வருவது வழக்கம். இந்நிலையில் கமலின் இயக்கத்தை சேர்ந்த சுதாகர் உள்ளிட் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆத்திரத்துடன் பதிவிட்டுள்ளார். அதில்,
“TN ஜ.கட்டுப் போராட்டத்தில் எமதியக்கத்தின் சுதாகரும் சிலரும் நேற்று கைது.. இது எமதுபெருமையைக் கூட்டவும் அரசியல் வன்மத்தைக் காட்டவும் செய்கிறது. இனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேசவைக்கிறது” என கூறியுள்ளார்.
மேலும், “நமதியக்கத்தார் சற்றதிகமாக கண்ணியம் காக்கும் நேரமிது. அளந்து பேசவும் தொடர்ந்து பேசவும்...அரசுகள் மாறிமாறிவரினும் நம் கட்சியற்ற கொள்கைமாறாது. எக்கட்சி அரசேற்றாலும் நம் பணி பொதுநலம் காப்பதே. இக்கூலியில்லா வேலையை நம் ஆயுளுள்ளவரை செய்வோம். அவர் பலமுறை வருவா் போவர். நிரந்தரம் நம்நாடு” என்றும் பதிவிட்டுள்ளார்.