மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார். அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் தொற்று பாதிப்பு இருப்பது தனக்கு உறுதி செய்யப்பட்டதாக கம்ஹாசன் தனது சமூகவலைதள பக்கத்தில் கடந்த 22-ஆம் தேதி பதிவிட்டிருந்தார். மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில், இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வழக்கமான பணிகளுக்குத் திரும்பியுள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியை கொரோனா தொற்றால் பாதிப்படைந்ததால் கடந்த வாரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். தற்போது, கமல்ஹாசன் வீடு திரும்பியுள்ளதால் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இதற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. உற்சாகமுடன் ”உங்கள் அன்பினால் மட்டுமே மீண்ட நான், இன்று உங்களுடன் மீண்டும் நான், இனி என்றுமே உங்கள் நான்” என்று உற்சாகமுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.