சினிமா

சிம்பன்சீயுடன் ஜீவாவின் அடுத்த பயணம்

சிம்பன்சீயுடன் ஜீவாவின் அடுத்த பயணம்

webteam

நடிகர் ஜீவா - ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் "கொரில்லா". இந்தப்படத்தில் இவர்களுடன் ஒரு சிம்பன்சீயும் நடிக்கிறது.

நடிகர் ஜீவா சில ஆண்டுகளாக பெரிய அளவில் வெற்றிப்படங்கள் எதுவும் கொடுக்கவில்லை. தன்னை நிரூபிக்கும் கட்டாயத்தில் அவர் உள்ளார். இதனைக்கருத்தில் கொண்டு தற்போது அவர் வித்தியசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்துள்ளார். சிம்பன்சீயை மையமாக கொண்ட ஒரு படத்தில் ஜீவா நடிக்கவுள்ளார். இதற்கு கொரில்லா என பெயரிடப்பட்டுள்ளது. ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜயராகவேந்திரா இப்படத்தை தயாரிக்கிறார். இயக்குனர் டான் சேண்டி இயக்குகிறார். ஜீவாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே ஒப்பந்தமாகியுள்ளார்."கொரில்லா" படத்தின்  படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்குகிறது.

படம் குறித்து இயக்குனர் டான் சேண்டி கூறும் போது,  “சிம்பன்சீகள் பெரும்பாலும் மிகவும் அறிவுள்ளவையாகும். அவை எப்போதும் புன்னகையுடன் இருப்பவையாகும் ஏன் என்றால் அவை எப்போதும் குறும்பானவை. இது பெரும்பாலான பார்வையாளர்களை கவர்ந்துவிடும். இதையே அடிப்படையாக வைத்து இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிம்பன்சீ, ஆக்‌ஷன் மற்றும் காமெடி காட்சிகளில் இடம் பெறும் வண்ணம் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக தாய்லாந்தில் பிரத்யேகமாக ஒரு சிம்பன்சீ 4 மாதங்களாக தயார்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிம்பன்சீ பங்குபெறும் காட்சிகள் அனைத்தும் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என எதிர்ப்பார்க்கிறோம். குறிப்பாக குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன”என  தெரிவித்துள்ளார்.