சினிமா

ஜெய்யின் ’மாங்கல்யம் தந்துனானே னா’

ஜெய்யின் ’மாங்கல்யம் தந்துனானே னா’

webteam

நடிகர் ஜெய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஜெய் நடிப்பில் வெளியான பலூன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், அடுத்ததாக ஜெய்யின் நடிப்பில் ’மாங்கல்யம் தந்துனானே னா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்தப் படத்தை புதுமுக இயக்குநர்கள் ஷாம் மற்றும் பிரவீன் இயக்குகின்றனர். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், திருமண பந்தத்தில் இணையும் இரண்டு எதிரிகளின் வாழ்க்கையை, திருமணம் எப்படி மாற்றுகிறது என்பதை காமெடி கலந்தக் காதல் பாணியில் தெரிவிப்பதே ’மாங்கல்யம் தந்துனானே னா’ திரைப்படத்தின் கதையாம். 

இந்தத் திரைப்படத்தில் இரண்டு நாயகிகள் பாத்திரத்தில், குரங்கு பொம்மை பட புகழ் டெல்னா டேவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு நாயகியின் பெயர் உறுதிசெய்யபடவில்லை. இதில் ஜெய்யின் நண்பனாக மரக நாணயம் டேனியல் நடிக்கவிருக்கிறார். ராஜா ராணி திரைப்படத்தில் ஜெய்யின் கதாபாத்திரம் பெருமளவில் பேசப்பட்டிருந்த நிலையில்,’மாங்கல்யம் தந்துனானே னா’  திரைப்படம் ஜெய்யின் நடிப்புத் திறமைக்கு மற்றொரு புகழை வாங்கித் தரும் என்று இயக்குநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.