சுந்தர் சி தயாரிக்கும் படப்பிடிப்பில் நடிகர் ஜெய்க்கு தோள்ப்பட்டையில் காயம் ஏற்படுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு ’தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ படத்திற்குப்பின் சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த நடிகர் ஜெய் மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதோடு இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார். மேலும், ’அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கும் படம், இயக்குநர் அட்லி எழுதி, தயாரித்து, அவரது உதவியாளர் இயக்கும் படம் உட்பட படங்களில் ஜெய் நடிக்கவிருக்கிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கின்றன.
இந்த நிலையில், சுந்தர் சி தயாரிப்பில் பத்ரி இயக்கும் படத்தில் ஜெய் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அதில், ஜெய் மேடையை உடைக்கும் படியான காட்சிகள் படமாக்கப்பட்டபோது ஜெய்யின் தோள்பட்டை இடம்பெயர்ந்து விபத்தாகியுள்ளது. உடனடியாக படக்குழுவினர் பிசியோ தெரப்பிஸ்ட் மூலம் சிகிச்சை அளித்துள்ளனர். அந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைப்பது சிரமம் என்பதால் பிசியோதெரபி மூலம் தோள்பட்டையை சரிசெய்துகொண்டு அன்றே நடித்து முடித்துக் கொடுத்திருக்கிறார் நடிகர் ஜெய்.