சினிமா

’இடிமுழக்கம்’: கவனம் ஈர்க்கும் சீனு ராமசாமி - ஜிவி பிரகாஷ் படத்தின் தலைப்பு

’இடிமுழக்கம்’: கவனம் ஈர்க்கும் சீனு ராமசாமி - ஜிவி பிரகாஷ் படத்தின் தலைப்பு

sharpana

இயக்குநர் சீனு ராமசாமி - ஜி.வி பிரகாஷ் இணையும் படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருக்கும் இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில், தற்போது சீனு ராமசாமி ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் ஜி.வி பிரகாஷுடன் இணைந்திருக்கிறார். இதுவரை வந்த சீனு ராமசாமியின் படங்களில் சற்று மாறுதலாக, ஆக்‌ஷன் த்ரில்லர் கிராமத்து பின்புலத்தில் அமைந்துள்ள படம் என்று சொல்லப்படுகிறது. ஸ்கைமேன் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகன் இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைக்க வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின், படப்பிடிப்பு இரண்டு வாரங்களாக தேனியில் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், இன்று தலைப்பை அறிவித்திருக்கிறது படக்குழு. ‘இடிமுழுக்கம்’ என்று படத்திற்கு தலைப்பிட்டுள்ளனர். வழக்கம்போல, கவனம் ஈர்க்கும் தலைப்பாகவே தேர்வு செய்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி. இன்று, இப்படத்தின் தலைப்பை நடிகர் விஜய் சேதுபதியும் நடிகர் உதயநிதி ஸ்டாலினும் வெளியிட்டுள்ளார்கள்.