இயக்குநர் சீனு ராமசாமி - ஜி.வி பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருக்கும் இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
இந்த நிலையில், தற்போது ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் ஜி.வி பிரகாஷுடன் இணைந்திருக்கிறார். இதுவரை வந்த சீனு ராமசாமியின் படங்களில் சற்று மாறுதலாக, ஆக்ஷன் த்ரில்லர் கிராமத்து பின்புலத்தில் அமைந்துள்ள படம் என்று சொல்லப்படுகிறது. இப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைக்க வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தேனியில் தொடங்கியுள்ளது.