சினிமா

மாரி செல்வராஜ் - உதயநிதி படத்தில் இணையும் ஃபகத் ஃபாசில்?

மாரி செல்வராஜ் - உதயநிதி படத்தில் இணையும் ஃபகத் ஃபாசில்?

sharpana

மாரி செல்வராஜ் - உதயநிதி இணையும் படத்தில் ஃபகத் ஃபாசில் இணையவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ஃபகத் ஃபாசில் மலையாள சினிமாவில் ஹீரோவாக நடித்தாலும், மற்ற தென்னிந்திய படங்களில் உறுதுணை கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்து வருகிறார். தமிழில் ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘வேலைக்காரன்’ படங்களில் நடித்தவர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். அதோடு, தெலுங்கில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இந்த நிலையில், மாரி செல்வராஜ் - உதயநிதி இணையும் புதிய படத்தில் ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘ஆர்டிகிள் 15’, ‘கண்ணை நம்பாதே’ படங்களின் படப்பிடிப்பை முடித்தப்பிறகு டிசம்பர் முதல் மாரி செல்வராஜ் - உதயநிதி படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.